• home
Home » » 15 வயதுச் சிறுமியை காதலித்துக் கர்ப்பமாக்கிய இளைஞன் கைது!

15 வயதுச் சிறுமியை காதலித்துக் கர்ப்பமாக்கிய இளைஞன் கைது!

வென்னப்புவ லுணுவில பகுதியில் இருபது வயதுடைய இளைஞர் ஒருவர் பதினைந்து வயதுடைய சிறுமியொருவருடன் நீண்ட நாட்களாக வைத்திருந்த கள்ளத்தொடர்பால் சிறுமி கர்ப்பமாகியுள்ளதுடன் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுவில பகுதியில் வசித்துவரும் குறித்த சந்தேக நபரான இளைஞன், குறித்த சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியிருந்ததுடன் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் பாலியல் சிலுமிசங்களில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாரின் அவசர பிரிவுக்கு தெரிவித்ததையடுத்து வென்னப்புவ பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரு மாத கர்ப்பிணியாக இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபரான இளைஞனை மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment