
கேழ்வரகு சேமியா - 1 கப்
வெங்காயம் - 1
ப. மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
செய்முறை....
• கேழ்வரகு சேமியாவை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
• வெங்காயம் சிறிது வதங்கியதும் வேக வைத்த கேழ்வரகு சேமியா, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
• இந்த கேழ்வரகு சேமியா உப்புமா மிகவும் சத்தானது.
0 comments:
Post a Comment