• home
Home » » கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்

கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்

கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்தேவையான பொருட்கள்.... 

ஸ்வீட் சோளம் (sweet corn) - 1 கப் 
பச்சை பட்டாணி - 1 கப் 
தர்பூசணி - ஒரு துண்டு 
ஆப்பிள் - 1 கப் 
உப்பு - சிறிதளவு 
மிளகு தூள் - சிறிதளவு 
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன் 

செய்முறை.... 

• தர்பூசணியில் இருந்து கொட்டையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• ஸ்வீட் சோளம், பட்டாணியை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஸ்வீட் சோளம், பட்டாணி போட்டு அதில் மிளகு தூள், உப்பு போட்டு கிளரவும். 

• பிறகு ஆப்பிள் மற்றும் தர்பூசணி, எலுமிச்சை சாறு போட்டு கிளறி பரிமாறவும். 

• மிகவும் சத்தான, சுவையான சாலட் ரெடி

0 comments:

Post a Comment