
பச்சை நெல்லிக்காயில் 80 சதவீதம் தண்ணீர் சத்து இருக்கிறது. நார்சத்து, மாமிச சத்து, கார்போஹைட்ரேட்ஸ் போன்றவைகளும் உள்ளன. தேன் சேர்த்து இந்த ஜூஸ் பருகினால் பெண்களுக்கு உடல் அழகு பெருகும். 100 மி.லி. ஜூஸ் பருகினால், 40 கலோரி சக்தி கிடைக்கும்.
ஆரஞ்சு ஜூஸ்:
ஆரஞ்சு பழத்தில் விதைகளை நீக்கிவிட்டு, மிக்சியில் அடியுங்கள். குளிரவைத்து சுவையாக பருகுங்கள். தினமும் இரண்டு கப் குடித்தால் கோடை காலத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைத்து விடும். பொட்டாசியமும், மெக்னீஷியமும் இதில் இருக்கிறது. 100 மி.லி. ஜூஸ் குடித்தால் 45 கலோரி கிடைக்கும்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட், கேரட், சிறிதளவு செலரி போன்றவைகளை சேர்த்து இந்த ஜூஸ் தயாரிக்கவேண்டும். பீட்ரூட்டில் இனிப்பு சுவை இருப்பதால் தனியாக சர்க்கரை சேர்க்கவேண்டியதில்லை. இதில் பொட்டாசியம், மெக்னீஷியம், காப்பர், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. கோடை உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் சக்தி மட்டுமல்ல, புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும் இதில் உள்ளது. 100 மி.லி. பீட்ரூட் ஜூஸ் 35 கலோரி சக்தி தருகிறது.
எலுமிச்சை, தேன் ஜூஸ்:
எலுமிச்சை சாறையும், தேனையும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் ஆக்கி அதில் ஒரு சிட்டிகை உப்பும், மிளகுதூளும் கலந்து பருகவேண்டும். இதில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. ஒரு கப் எலுமிச்சை சாறில், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் 20 கலோரி சக்தி கிடைக்கும். உடலுக்கு நல்லகுளிர்ச்சியை தரும்.
ஆப்பிள் ஜூஸ்:
தோல் நீக்கிய ஆப்பிளை துண்டுகளாக்கி மிக்சியில் அடித்து சாறு எடுங்கள். அதில் இனிப்பு தன்மை அதிகம் இருப்பதால் சர்க்கரை சேர்க்கவேண்டியதில்லை. ஆப்பிள் ஜூஸ் தயாரித்த சிறிது நேரத்திலே அதன் நிறம் மாறிவிடும். அதனால் தயாரித்த உடன் பருகிடவேண்டும். ஒரு கப் ஆப்பிள் ஜூஸ் பருகினால் பலவிதமான வைட்டமின்களும், தாதுக்களும் உடலுக்கு கிடைக்கும். இதுபோல் கேரட் ஜூஸ், கிர்ணி பழ ஜூஸ், சப்போட்டா ஜூஸ் போன்றவைகளும் கோடைக்கு இதமானவை
0 comments:
Post a Comment