• home
Home » » கோடைக்கு இதம் தரும் ஆடைகள்

கோடைக்கு இதம் தரும் ஆடைகள்

கோடைக்கு இதம் தரும் ஆடைகள்கோடைக்காலத்திற்கு பருத்தி ஆடைகளே சிறந்தவை. கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. 

அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது. 
கோடை காலத்திற்கு இதம் தரும் உடைகளை பார்க்கலாம்.. 

கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேன்ட் சட்டைகள், டி-ஷர்ட்டுகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம். கோடைக்காலத்தில் பெண்களுக்கு வசதியுடன் இருக்கும் ஆடை என்றால் அது சேலை தான். 

கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும். சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். காட்டன் சல்வார் கமீஸ் கோடைக்காலத்திற்கு மிகவும் நல்லது. 

லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள். வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். 

முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள். ஹாரெம் பேன்ட் மற்றும் வேஷ்டிகளும் தற்போது நடப்பிலுள்ள ஆடைகளாகும். அவைகள் லூசாக இருப்பதால், வெப்பமான நேரத்தில் அவைகள் சிறந்த ஆடைகளாக இருக்கும். ஆனால் பருத்தி வகை ஹாரெம் பேன்ட்களை அணியுங்கள். 

0 comments:

Post a Comment