
குளிக்கும்போது சோப் பயன்படுத்துவதற்கு பதில், பச்சை பயறு மாவை பயன்படுத்த வேண்டும். குளிக்க பயன்படுத்தும் நீரில் சிறிதளவு கல்உப்பு கலந்து குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது.
சிறிதளவு பசுவின் பால் கலந்த நீரில் உடலை கழுவினால், சருமத்திற்கு மிருதுதன்மை கிடைக்கும். வியர்வை அதிகமாக வெளியேறுவதால், உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் அடைபடும். உடலை அவ்வப்போது நன்றாக கழுவி சுத்தம் செய்யாவிட்டால் வியர்க்குரு தோன்றிவிடும்.
வெயிலில் வெளியே போய்விட்டு வந்து குளிர்ந்த நீர் பருகுவது, ஏ.சி. அறைக்குள் புகுந்துகொள்வது போன்றவை நல்லதல்ல. வெயிலால் ஏற்படும் உடல் சீதோஷ்ண நிலை சமச்சீரான பின்பே ஏ.சி.யை பயன்படுத்தவேண்டும்
0 comments:
Post a Comment