• home
Home » » தர்பூசணி- மாதுளை ஜூஸ்

தர்பூசணி- மாதுளை ஜூஸ்

தர்பூசணி- மாதுளை ஜூஸ்தேவையான பொருட்கள் :

மாதுளை முத்து - 1 கப் 
தர்பூசணி - 1 துண்டு 
தேன் - தேவையான அளவு 
உப்பு - 1 சிட்டிகை 
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன் 
இஞ்சி - சிறிய துண்டு 

செய்முறை :

• இஞ்சியை தோல் சீவி வைக்கவும். 

• மாதுளை முத்துகளை தர்பூசணி துண்டுகளுடன், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடித்துக்கொள்ளவும்.

• இத்துடன் எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து பரிமாறுங்கள். 

• புத்துணர்ச்சி தரும் இந்த ஜூஸ், எந்த காலத்திற்கும் ஏற்றது. 

குறிப்பு: தர்பூசணி கிடைக்காத காலத்தில் சிறிய கேரட் அல்லது வெள்ளரிக்காய் துண்டு சேர்த்து அரைத்து வடித்து பரிமாறவும். பெரியவர்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் மிகவும் நல்லது.

0 comments:

Post a Comment