
இந்த ஆசனத்திற்கு குழந்தை ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக முன்பக்கமாக குனிந்து நெற்றியால் தரையை தொட வேண்டும்.
கைகளை படத்தில் உள்ளபடி தரையில் நீட்டவேண்டும். உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
பயன்கள் :
இந்த யோகாசனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த ஆசனமாகும். இடுப்பு, தொடைகள், முழங்கைகள் ஆகியவற்றை மென்மையாக நீட்டச் செய்து, மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் களைப்பிலிருந்து நிவாரணம் தரவும் இந்த ஆசனம் உதவுகிறது.
இந்த ஆசனம் நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்துவதால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் தரவும் உதவுகிறது.
0 comments:
Post a Comment