
உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும். ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
• உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது. இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது.
உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட வாய்ப்புகள் உண்டு. இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வகையான நட்புகளே. ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறவை பாதுகாத்ததற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
• ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு 'ஓகே' என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே கவனம் தேவை இக்கனம்!
• ஃபேஸ்புக்கில் உள்ள 'டைம்லைன்' பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார்.
இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும் காண முடியும்.
நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது.
0 comments:
Post a Comment