• home
Home » » பெண்களே முதலீட்டில் துணிந்து இறங்குங்கள்

பெண்களே முதலீட்டில் துணிந்து இறங்குங்கள்

பெண்களே முதலீட்டில் துணிந்து இறங்குங்கள்செலவுகளைக் குறைப்பதில் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை எப்போது கட்டவேண்டும், எப்படிக் கட்டினால் பணம் மிச்சமாகும்  என்பது பற்றியெல்லாம் பலரிடம் விசாரித்து அதன்படி நடப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் விசாரித்து நடப்பதால் பெண்களால் முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் எளிதாக கற்றுக்கொண்டு செய்ய முடியும். ஆனால், பெரும்பாலான ஆண்கள் முதலீடு சம்பந்தமான தகவல்களை தங்கள் மனைவிடம் பகிர்ந்துகொள்வதில்லை.   

முதலீடு சார்ந்த விஷயங்களை பெண்கள் கற்றுக்கொண்டாலே போதும், இந்தப் பிரச்சனைகளிலிருந்து எளிதாக வெளியே வந்துவிடலாம். முதலீடு தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை தன் கணவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டாயம் எடுத்துவையுங்கள். 

இல்லையெனில் எதிர்பாராதவிதமாக நிகழும் மருத்துவ செலவுகளுக்கு கையில் இருக்கும் பணத்தைச் செலவழிக்கவேண்டியிருக்கும். குறைந்தபட்ச ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுத்துவைப்பது அவசியம். முதலீடு என்பது பலவிதங்களில் இருக்க வேண்டும். தங்கம், மியூச்சுவல் ஃபண்டு, ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் என பிரித்து வையுங்கள்.   

குடும்ப செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப செலவழிக்க பழகுங்கள். சம்பளம் வந்தவுடனே எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்பினை எடுத்து வைத்துவிட்டு, அதன்பிறகு செலவழிக்க பழகிக் கொள்ளுங்கள். எங்கு முதலீடு செய்கிறீர்கள், அதன் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்த முதலீட்டில் என்னென்ன ரிஸ்க் உள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும். 

அந்த முதலீட்டில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். உங்களின் முதலீடு எளிதில் பணமாக்கக் கூடியதாக இருக்கவேண்டும். முதலீடு செய்யும் போது ஏஜென்ட் கமிஷன் எவ்வளவு, நிர்வாக செலவுபோக நம்முடைய முதலீடு எவ்வளவு இருக்கும் என்பதைப் பார்ப்பது அவசியம். 

இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டால் போதும், இனி பெண்களே தங்களுக்கான முதலீடுகளைத் தாங்களே தைரியமாக செய்துகொள்ளலாம். இனி தயக்கம் கொள்ள வேண்டாம். முதலீட்டு உலகில் பெண்கள் துணிந்து இறங்கவேண்டியதுதானே!

0 comments:

Post a Comment