
அவைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்கள் ஆடல், பாடல், நடிப்பு போன்று ஏதாவது ஒருதுறையில் வளர்ந்து விடுகிறார்கள். பலருக்கும் தெரிந்த முகங்களாக அவர்கள் மாறும்போது, சில நேரங்களில் அவர்கள் செல்லும் ‘பாதையும்’ மாறுகிறது.
எளிய வாழ்க்கை வாழும் அவர்களது பெற்றோர், மகளிடம் ‘நீ செல்லும் பாதை சரியில்லையே!’ என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். பெற்றோரையே புறக்கணித்து விட்டு, வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார்கள்.
அதன் பின்பு தனிமையிலோ, பிரச்சினைக்குரிய வெளிநபர்களுடன் சேர்ந்தோ வாழ்ந்துவிட்டு பல்வேறு துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்துவிட்டு மீண்டும் தாயிடம் போய் சேருகிறார்கள். இது ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
இன்று நிறைய இளம்பெண்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். பணத்தை பார்க்கும் அவர்கள், அதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடுகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கண்டிப்புகள், விவாதங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும். பெற்றோரை புறக்கணித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போது அவர்கள் பாதுகாப்பற்ற நிராயுதபாணியாகிவிடுகிறார்கள்.
அப்போது அவர்களைத் தேடி அன்பு, பாசம், அனுசரணை போன்ற போலி முகமூடிகளைத் தரித்துக்கொண்டு சிலர் அணுகுகிறார்கள். அவர்களது வலைக்குள் பெண்கள் சிக்கிக் கொள்ளும்போது எல்லையற்ற இன்னல்களையும், அவமானங்களையும், இழப்புகளையும் சந்திக்கிறார்கள். அதுவே அவர்கள் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது.
0 comments:
Post a Comment