
இவ்வகை இயந்திரங்கள் மல்லாந்து படுத்து (அ) உட்கார்ந்து பயிற்சி செய்யக்கூடிய இரண்டு மாடல்களில் கிடைக்கும், இந்த இயந்திரங்கள் வசதியை அதிகரிக்க பட்டைகள் (பேடுகள்) கொண்டுள்ளன. பேடுகள் இடையேயான தூரத்தையும் சரிசெய்ய அனுமதிக்கிறது.
இந்த உடற்பயிற்சி இயந்திரம் கொண்டு டிரைசெப்ஸ்கள் மற்றும் தோள்களில், கூட பயிற்சிகள் செய்ய முடிந்தாலும் இவை முழுக்க முழுக்க மார்பு தசைகளை வலுப்படுத்தவே உபயோகம் செய்யப்படுகிறது. வீட்டில் இருந்தபடி மார்பு பகுதிகளை வலுவடைய இந்த பயிற்சியை செய்யலாம்.
இந்த இயந்திரத்தில் தினமும் 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. ஒரு மாதம் தொடர்ந்து இந்த செஸ்ட் ஃப்ளை இயந்திரத்தில் பயிற்சி செய்தால் மார்பு பகுதி வலிமை அடைந்து கவர்ச்சியாக மாறுவதை காணலாம்.
0 comments:
Post a Comment