• home
Home » » மர்ஜாரியாசனா

மர்ஜாரியாசனா

மர்ஜாரியாசனாசெய்முறை : 

முதலில் விரிப்பில் முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து தரையில் கைகளை ஊன்ற வேண்டும். பின் முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும், கைகளை சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும். மூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே பார்க்கவும். இவ்வாறு தொடர்ந்து 5  முறை செய்த பின் பழைய நிலைக்கு வரவும். 

பயன்கள் : 

இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியது. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.

பூனை போல உடலை வளைத்து நீட்டுவதால் இரத்த ஓட்டம் மேம்படும், மனம் ஓய்வு நிலைக்கு வரும், மன அழுத்தம் வெற்றி காணப்பட்டு, சுவாசம் நல்ல நிலைக்கு வரும். அழுத்தமாக இருக்கும் தசைகளை ஓய்வு நிலைக்கு கொண்டு வரும் பணியை செய்வதால், வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்பது தான் இந்த ஆசனத்தின் சிறப்பாகும். 

0 comments:

Post a Comment