• home
Home » » அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

Herbal Powder for Soft Skin - Beauty Care and Tips in Tamilசருமத்தின் அழனை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். சொந்த காசில் சூனியம் வைத்தது போல ஆகிவிடும் நம் சருமம். ஆகையால் சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுதுங்கள். பொலிவான தோற்றம் பெறுங்கள்...
மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை இதோ:
பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.
பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.
வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது. வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை.
தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.
வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்

0 comments:

Post a Comment