• home
Home » » அழகு குறிப்புகள்:பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதெப்படி?

அழகு குறிப்புகள்:பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதெப்படி?

Winter Skin Care Tips - Beauty Care and Tips in Tamilவெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும். பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். ஆலுவேரா எனப்படும் சோற்றுக் கற்றாழை சேர்த்த மாய்ச்சரைஸரை சோப்புபோல உடல் முழுவதும் தேய்த்து, வெறுமனே தண்ணீ­ர் ஊற்றிக் குளிக்கலாம். சோப்பைத் தவிர்த்து, பால், தயிர் போன்றவற்றையும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பை உபயோகித்தாலும் தவறில்லை.
வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக தண்­ர் குடிக்க வேண்டும். இது எல்லா சரும வகையினருக்கும் பொருந்தும்.
தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.
சாதாரண மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள சருமக்காரர்களுக்குப் பனிக்காலம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களும் நிறைய தண்ணீ­ர் குடித்து, பப்பாளி, ஆப்பிள் பழ வகைகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் உமா.

0 comments:

Post a Comment