• home
Home » » பெண்களை திசைமாற்றும் ‘பாய்பிரெண்ட்’ பிரச்சனை

பெண்களை திசைமாற்றும் ‘பாய்பிரெண்ட்’ பிரச்சனை

பெண்களை திசைமாற்றும் ‘பாய்பிரெண்ட்’ பிரச்சனைகல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றால் தங்களுக்கு ‘கேள் பிரெண்ட்’ இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். மாணவிகள் என்றால், ‘பாய் பிரெண்ட்’ அவசியம் என்று கருதுகிறார்கள். அதை ஒரு கவுரவமான விஷயமாக எடுத்துக்கொள்கிறார்கள். 

தங்களுக்கு அப்படி ஒரு ‘பிரெண்டாவது’ கிடைக்காவிட்டால் மனம் நொந்து போய்விடுகிறார்கள். எதிர்பாலின நண்பர்கள் எல்லோருக்கும் அவசியம் தான். ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், நட்பின் மரியாதையை பற்றியும்- நட்பின் எல்லையை பற்றியும் இருபாலரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இல்லாவிட்டால் அதுவே பல நேரங்களில் திசைமாறி தவறான செயல்களுக்கும், குற்றங்களுக்கும் காரணமாகிவிடும். கல்லூரிக்கு மாணவர்கள் எல்லோரும் செல்வது படிப்பதற்காக மட்டுமே! அந்த படிப்புக்கு துணைபுரியும் விதத்தில் நண்பர்களை தேடிக்கொள்ளவேண்டும். 

ஆனால் சிலர் அந்த அடிப்படை உண்மையை உணராமல், படிப்பை மறந்துவிட்டு நட்பை தேடுவதிலே குறியாக இருக்கிறார்கள். ஒரு ‘கேள் பிரெண்டை’ குறி வைக்கிறார்கள் என்றால், அவளுக்குதக்கபடி தங்கள் நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்கள். 

படிப்பில் செலுத்தும் கவனத்தைவிட மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் விஷயங்களில் காட்டும் அக்கறைதான் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. பெண்களை கவரவேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. அழகான பெண்கள் தங்களை வட்டமிட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்படுகிறார்கள். 

அதனால் பந்தாவிற்காக நிறைய பணத்தையும் செலவு செய்கிறார்கள். சிலர் பெண்களை கவருவதாக நினைத்துக் கொண்டு வித்தியாசமான விளையாட்டுகளில் ஈடுபட்டு விபரீதங்களை சந்திக்கிறார்கள். பண விஷயத்தில் சில பெண்கள் மிகுந்த ‘விழிப்புடன்’ இருக்கிறார்கள். 

தங்களை சுற்றி வந்து ‘பிரெண்டாக’ மாற்ற விரும்பும் ஆண்களில் யாருடைய ‘பர்ஸ்’ கனமாக இருக்கிறது என்று சில வாரங்கள் கண்காணிக்கிறார்கள். உண்மை நிலை தெரிந்தபின்பு, பண விஷயத்தில் உயர்வாக இருப்பவரை தங்கள் ‘பாய்பிரெண்டாக’ ஏற்றுக்கொள்கிறார்கள். 

ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்களை சுற்றிவரும் பெண்களுக்கு எவ்வளவு பணத்தை செலவிடுவோமோ அதைவைத்துதான் தமது அந்தஸ்து நிர்ணயிக்கப்படுவதாக கருதுகிறார்கள். அதையே தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு ஆண்கள் தலையில் மிளகாய் அரைக்கும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். 

அப்போதெல்லாம் வட்டிக்கு கடன் வாங்கி படிக்கவைக்கும் பெற்றோர்களை பற்றி மாணவர்கள் சிந்தித்துப்பார்ப்பதே இல்லை. நன்றாக செலவழிக்கும் மாணவர் பின்னால் ஒரு கூட்டமே போகும். அந்த மாணவர், அந்த கூட்டம் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். 

சிலருக்கு கல்லூரி கட்டணம் கூட கட்டுகிறார். விடுமுறை நாட்களில் சினிமா, ஓட்டல் என்று அழைத்துப் போய் பந்தா காட்டுகிறார். பெற்றோர் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைப்பது போன்ற சினிமா காட்சிகளை பார்க்கும் போதுகூட தனது பெற்றோர்படும் கஷ்டத்தை அவர் நினைத்துப்பார்ப்பதில்லை. 

சிலர் இளம் பெண்கள் முன்னால் தங்களை ஹீரோவாக காட்டிக்கொள்ள உயிரையே விட்டிருக்கிறார்கள். புதிய வகை இருசக்கர வாகனம் இருந்தால்தான் இளம்பெண்கள் தங்களை திரும்பிப்பார்ப்பார்கள் என்று நினைத்து பெற்றோரை நச்சரித்து அதை வாங்குகிறார்கள். 

தான் விரும்பும் பெண், அதன் பின்பும் திரும்பிப்பார்க்காவிட்டால் அந்த பெண் முன்னே, அந்த பைக்கில் சாகசம் செய்கிறார்கள். அதில் மண்டை உடைந்தவர்கள் பலர் உண்டு. சிலர் தான் பார்க்கும் பெண் பஸ்டாப்பில் நின்றிருந்தால் பஸ் சில் ஓடிப்போய் ஏறுவது,

புட் போர்டில் தொங்கிக் கொண்டே பயணிப்பது என்றெல்லாம் தவறான வழி களை கையாண்டு தங்கள் உடலை புண்ணாக்கிக் கொள்கிறார்கள். உயிரைக்கூட விட்டிருக்கிறார்கள். பெண்கள் இதுபோன்ற செயல்கள் செய்பவர்களை திரும்பிப்பார்க்காமல் இருந்தால் அவர்களாகவே அடங்கிப்போய்விடுவார்கள். 

0 comments:

Post a Comment