
உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஓட்டாமல் இருப்பதே நல்லது. சிலர், வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ ஏற்படும் பிரச்சனைகளுடன் கோபமாக வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் 'அட்ரினல் ஹார்மோன்’ அதிகமாகச் சுரக்கும். இதனால் படபடப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம்.
மனக் குழப்பத்துடன் ஓட்டுவதைத் தவிர்க்கவும். வண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. இருசக்கர வாகனம் ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதன்மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து கண்காணிக்க வேண்டும். உங்களுக்கான வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேகத்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டாம். ஆரோக்கியமான நிலையில் வாகனம் ஓட்டுங்கள். தூக்கத்தைத் தரும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். நீண்ட பயணத்தின்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது தூக்கம் வந்தால், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி ஓய்வெடுங்கள். அல்லது காபி போன்ற தூக்கத்தை விரட்டும் பானங்கள் அருந்தலாம். அதிகாலை 2 முதல் 6 மணி வரை மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள். மதிய உணவுக்குப் பிறகு 2 முதல் 4 மணி வரையில் வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.
0 comments:
Post a Comment