• home
Home » » முள்ளங்கி - பார்லி சூப்

முள்ளங்கி - பார்லி சூப்

முள்ளங்கி - பார்லி சூப்தேவையான பொருட்கள்: 

சிவப்பு முள்ளங்கி - 4 
பார்லி - 100 கிராம் 
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு 
கேரட் - 1 
பால் - 100 மில்லி 
காலிபிளவர் - சிறிதளவு 

செய்முறை :

• முள்ளங்கி, காலிபிளவர், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

• பார்லியுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும். 

• நறுக்கிய காய்கறிகளை பார்லியுடன் சேர்த்து மீண்டும் வேக வைக்க வேண்டும். 

• பின்னர் அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத் தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். 

• சுவையான சத்தான முள்ளங்கி சூப் ரெடி. 

• இந்த சூப் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

0 comments:

Post a Comment