• home
Home » » நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைமுதலில் எந்த இடத்தில் இன்டர்வியூ என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் ஆட்டோவில் ஊரைச் சுற்றி வருவதற்குள் இன்டர்வியூ தொடங்கி நடந்து கொண்டிருக்கும். இன்டர்வியூவுக்கே சரியான நேரத்திற்கு வர முடியாதவர், வேலை கொடுத்தால் எப்படி வருவாரோ என்ற சந்தேகம், கிடைக்கவிருக்கும் வேலையை காலி பண்ணி விடும்.

இன்டர்வியூ உள்ளூர் என்றால், அந்த இடத்துக்கு உங்கள் ஏரியாவில் இருந்து எவ்வளவு தூரம்? பஸ், ரெயில் வசதி உண்டா? அல்லது ஆட்டோதான் சரியாக இருக்குமா? என்பதையெல்லாம் இன்டர்வியூவுக்கு முந்தைய நாளுக்குள் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுவே வெளியூரில் இருந்து வருகிறீர்கள் என்றால், இன்னும் கவனம் அவசியம். குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்டர்வியூ வருகிற ஒருவர், முந்தைய நாள் மாலையில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணியளவில்தான் சென்னை வர முடியும்.

இங்கோ இன்டர்வியூ காலை 10 மணிக்கு தொடங்கும். இதற்குப் பிறகு நீங்கள் குளித்து டிபன் முடித்து தயாராகி பைலோடு இன்டர்வியூ நடக்கும் இடத்தை அடைய நிச்சயம் தாமதமாகி விடலாம். இதனால் முடிந்தவரை மூன்று மணி நேரத்துக்கு முன்பாக இன்டர்வியூ நடக்கும் ஊரில் நீங்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதெல்லாமே நல்லபடியாக நடந்து இதோ இன்டர்வியூ நடக்கும் அலுவலகம் வந்து விடுகிறீர்கள். உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள். அப்போது தேவையில்லாத டென்ஷனை தவிர்த்து விடுங்கள். இன்டர்வியூ அறையில் நீங்கள் நுழைந்ததும் முதலில் கேட்கப்படுகிற கேள்வி, உங்களைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

உட்காரச் சொன்னதும் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றுதான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். அதாவது உங்களைப் பற்றி சுருக்கமாக நீங்களே சில வரிகள் சொல்ல வேண்டும். இந்த முதல் கேள்விக்கு எந்தவித தயக்கமுமின்றி நீங்கள் சொல்லப்போகும் பதிலில் தான் இன்டர்வியூ அதிகாரிகள் அடுத்தடுத்த கேள்விகளுடன் உங்களுடன் இயல்பாக பயணிக்க தயாராவார்கள்.

முதல் கேள்விக்கான பதிலை நீங்கள் முன்கூட்டியே இந்த மாதிரி சொல்லலாம் என்பதை மனத்திரையில் ஓட விட்டு தயார் செய்து கொள்ளுங்கள். அதை அதிகாரிகள் முன்னிலையில் மிகவும் கேஷூவலாக சொல்லுங்கள்.

உங்களைப் பற்றி, கல்வி பற்றி, குடும்பம் பற்றி, லட்சியம் பற்றி, உங்களுடைய இன்னபிற பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றி என உங்கள் சம்பந்தப்பட்ட அத்தனை பாசிட்டிவ் விஷயங்களையும் பதட்டமின்றி சொல்லிவிடுங்கள்.

இந்த நேரத்தில் திணறலோ, மூச்சு வாங்கலோ வேண்டாம். பாடம் ஒப்பிக்கிற குழந்தை மாதிரியே இந்த பயோடேட்டா அமைந்திருக்க வேண்டியதில்லை. போகிறீர்களோ, அந்த கம்பெனியைப் பற்றிய மொத்த தகவல்களையும் அதாவது அந்த கம்பெனி தயாரிக்கும் பொருட்கள், அதன் மார்க்கெட் நிலவரம் வரை ஒரு குறிப்பு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு அந்த கம்பெனியின் வெப்சைட்டில் உங்கள் பார்வையை ஓட விட்டாலே போதும். நீங்கள் இன்டர்வியூ செல்லப்போகும் கம்பெனியில் உங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்கள் யாராவது வேலை பார்க்கிறார்கள் என்றால், அவர்களிடம் அந்த கம்பெனியில் மிக சமீபத்தில் நடந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கம்பெனி தொடர்பான கேள்வியின்போது இந்த பதில் பொருத்தமான இடத்தில் சொல்லப்பட்டாலே போதும். நிர்வாகம் உங்களை உற்றுக்கவனிக்கத் தொடங்கி விடும். எந்த கம்பெனியில் இன்டர்வியூ உங்களுடைய ஒவ்வொரு பதில்களும், உங்கள் வெற்றிக்கான வழிகள் தான். அதனால் அதைக் கொஞ்சம் விரிவாகவும் சொல்லலாம்.

0 comments:

Post a Comment