• home
Home » » பிரெட் சாண்ட்விச்

பிரெட் சாண்ட்விச்

பிரெட் சாண்ட்விச்தேவையானவை: 

கோதுமை பிரெட் ஸ்லைஸ்- 6, 
வெண்ணெய் - 2 டீஸ்பூன், 
நூடுல்ஸ் (வெந்தது) - அரை கப், 
வெங்காயம் - ஒன்று, 
பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், 
உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 2, 
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், 
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, 
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

• வெங்காயம், இஞ்சி,கொத்தமல்லி இலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும் 

• கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும்... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வெந்ததும் நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு,  தக்காளி சாஸ், கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும். 

• இந்தக் கலவையில்  2 டீஸ்பூன் எடுத்து, ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது பரவலாக வைக்கவும். 

• மற்றொரு பிரெட் ஸ்லைசை மேலே வைத்து லேசாக அழுத்திவிட்டு பரிமாறலாம். 

குறிப்பு: மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த சாண்ட்விச் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு ஏற்றது. 

0 comments:

Post a Comment