• home
Home » » பீட்ரூட் சாலட்

பீட்ரூட் சாலட்

பீட்ரூட் சாலட்தேவையான பொருட்கள்.... 

பீட்ரூட் - 3 
உருளைக்கிழங்கு - 2 
வெங்காயம் - ஒன்று 
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி 
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - ஒன்று 
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி 
மல்லித் தழை - சிறிது 
உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை... 

• பீட்ருட் மற்றும் உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு காரட் துருவியில் வைத்து துருவி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும் 

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பீட்ரூட்,உருளைக்கிழங்கு, போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு கிளறவும் 

• அதனுடன் ஆலிவ் ஆயில், மிளகுத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்து விடவும். 

• கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.

0 comments:

Post a Comment