
வெள்ளைப்பூசணி - பாதி
கேரட் - 2
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை....
• வெள்ளைப்பூசணியை தோல்சீவி துருவி கொள்ளவும்
• கேரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும்
• கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
• பச்சை மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
• ஒரு பாத்திரத்தில் துருவிய பூசணி, கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சோர்த்து கலக்கவும்
• கடைசியாக மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: வெள்ளைப்பூசணிக்காய் இதுபோன்று பச்சையாக சாலட்டில் சேர்க்கும்போது சத்து முழுவதும் கிடைக்கிறது.
0 comments:
Post a Comment