• home
Home » » பொரி உப்புமா

பொரி உப்புமா

பொரி உப்புமாபொரி உப்புமா தேவையான பொருட்கள்

பொரி                                             - 2 கப்
வெங்காயம்                                - 1
குடைமிளகாய்                          - பாதி
சீரகப் பொடி                                - 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய்                         - 1
மிளகாய் பொடி                         - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி                            - சிறிது
உப்பு, எண்ணெய்                      - தேவையான அளவு
கடுகு                                             - 1/4 டீஸ்பூன்


பொரி உப்புமா செய்முறை

வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய், கொத்தமல்லி முதலியவற்றை பொடிப்பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வதங்கியவுடன் மிளகாய் பொடி, சீரகப்பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியாக பொரியைக் கொட்டி ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும். (சூடாக உடனே சாப்பிடவும். இல்லாவிட்டால் பொரி சுருங்கிப் போய்விடும்).

0 comments:

Post a Comment