• home
Home » » ப்ரெட் உப்புமா

ப்ரெட் உப்புமா

ப்ரெட் உப்புமாப்ரெட் உப்புமா தேவையான பொருட்கள்

ஃப்ரெட் ஸ்லைஸ்                    - 6 துண்டுகள்
எண்ணெய்                                   - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி (நறுக்கியது)              - 2
சீரகப்பொடி                                  - 1/2 டீஸ்பூன்
தனியாபொடி                              - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி                              - 1/4 டீஸ்பூன்
மிளகாய்பொடி                           - 1/4 டீஸ்பூன்
உப்பு                                                - தேவையான அளவு

விழுதாக அரைக்க

வெங்காயம்                                - 1
இஞ்சி                                            - 1 துண்டு
பச்சைமிளகாய்                         - 2
பூண்டு                                           - 6 பல்
கொத்தமல்லி இலை              - 1 கைப்பிடி

ப்ரெட் உப்புமா செய்முறை

ரொட்டிகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.பின்னர் தக்காளி, மசாலா, உப்பை சேர்க்கவும். நடு நடுவே நன்றாக கிளறி விடவும். தக்காளி மென்மையானதும், 1/2 கப் சூடுநீரையும், ரொட்டித்துண்டுகளையும் சேர்க்கவும். நன்றாக கலக்கி சில நிமிடங்கள் சமைக்கவும். கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

0 comments:

Post a Comment