• home
Home » » வாழைத்தண்டு சாலட்

வாழைத்தண்டு சாலட்

வாழைத்தண்டு சாலட்தேவையான பொருட்கள்.... 

வாழைத்தண்டு - ஒரு பெரிய துண்டு 
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன் 
மிளகு,சீரகப்பொடி - தலா அரை ஸ்பூன் 
கொத்துமல்லித்தழை - சிறிதளவு 
எலுமிச்சை சாறு - ஒருஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை....   

• வாழைத்தண்டை நார் நீக்கி மிகவும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும் 

•  நறுக்கிய வாழைத்தண்டுடன் 2 கப் தண்ணீரும்,எலுமிச்சை சாறும் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 

• பின்பு வாழைத்தண்டுகளை பிழிந்து தண்ணீரை வடித்து விட்டு ஒருபௌலில் போட்டு, அதன்மேல் துருவிய தேங்காய், நறுக்கிய கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும். 

குறிப்பு....வாழைத்தண்டு உடம்புக்கு மிகவும் நல்லது. உடல் இளைக்க விரும்புவோர் வாரம் இரு முறை இந்த சாலட் செய்து சாப்பிடலாம்.சிறு நீரில் உண்டாகும் கற்களையும் வாழைத்தண்டு நீக்கும்.

0 comments:

Post a Comment